fbpx
Connect with us

Cinemapettai

சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய அமானுஷ்ய மனிதர்.. தற்கொலை இல்லை கொலை என கூறிய வீடியோ செம வைரல்

Videos | வீடியோக்கள்

சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய அமானுஷ்ய மனிதர்.. தற்கொலை இல்லை கொலை என கூறிய வீடியோ செம வைரல்

இந்திய சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பாலிவுட் நடிகர் என்றால் அது சுஷாந்த் சிங் ராஜ்புத் தான்.

அதற்கு காரணம் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது தான். தமிழிலும் அந்த படம் செம வசூல் செய்தது.

ஜீரோ ஹேடர்ஸ் என அழைக்கப்படும் ஹீரோக்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் ஒருவர். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா ரசிகர்களை உலுக்கியது.

அதற்கான காரணம் பாலிவுட் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் தொடர்ந்து அவருக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொள்ள வைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டை சேர்ந்த அமானுஷ்ய மனிதர் ஸ்டீவ் ஹாப் என்பவர் எப்போதுமே இறந்து போனவர்களின் ஆவிகளுடன் பேசி அவற்றை வீடியோவாக வெளியிடுவாராம். அந்த வகையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆவியுடன் பேசிய தகவலை அவர் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத், நட்பு எனும் பெயரில் கொலை செய்துவிட்டார்கள் என குற்றம்சாட்டி உள்ளார். சில ஆண்டுகளாகவே தனக்கு பிரஷர் இருந்த நிலையில் பட வாய்ப்புகளும் குறைந்து கொண்டே சென்றது எனவும் கூறினாராம்.

இதற்கு மேல் இதைப் பற்றி பேச ஒன்றுமில்லை எனவும், இப்பொழுது நான் இங்கே நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பலரும் அது சுஷாந்த் சிங் ராஜ்புத் குரல் தான் எனக்கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top