fbpx
Connect with us

Cinemapettai

தோனி படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்து போன உச்ச நட்சத்திரங்கள்

India | இந்தியா

தோனி படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்து போன உச்ச நட்சத்திரங்கள்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவருக்கு வயது 34 தான் ஆகிறது.

கடந்த ஆறு மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது தற்கொலையா.? கொலையா.? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் இந்திய அளவில் இருக்கும் ரசிகர்களுக்கு பெரும் மன வேதனையை அளித்துள்ளது.

தோனி படத்தில் அனைத்து நடிகர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு ஒருவர் இறந்து போய் விட்டதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே அவர் ஒருவருடன் காதலில் இருந்தார் எனவும் செய்திகள் உள்ளது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகினறனர்.

dhoni-cinemapettai

dhoni-cinemapettai

மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை கொண்டதற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top