fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வளர்த்த நாயின் பெல்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சுஷாந்த் சிங்? பரபரப்பு வீடியோ!

sushant-singh-cinemapettai

India | இந்தியா

வளர்த்த நாயின் பெல்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சுஷாந்த் சிங்? பரபரப்பு வீடியோ!

பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்தவர் சுஷாந்த் சிங். இவர் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் தனது சொந்த வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இந்திய அளவில் உள்ள ரசிகர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சினிமாவில் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த சுஷாந்த் சிங்கின் தற்கொலை, பல சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது. சுஷாந்த் சிங் பாலிவுட்டில் உள்ள சினிமா வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் உதவியாளர் அன்கிட் ஆச்சார்யா திடுக்கிடும் சில தகவல்களை ‘Times Now’ நாளிதழுக்கு வீடியோவில் பதில் அளித்துள்ளார்.

அவர் வளர்த்த நாயின் பெல்டால் கழுத்தை இறுக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பரபரப்பு வீடியோ வெளிவந்துள்ளது. அன்கிட் ஆச்சார்யா கூறுகையில் மிகவும் மன தைரியம் உள்ளவர் சுஷாந்த், இவ்வளவு எளிதாக தற்கொலை முயற்சிகள் செய்ய மாட்டார்.

அப்படியே தூக்குப் போட்டுக் கொண்டால் வாயில் நுரை தள்ளி இருக்கும் அப்படி எதுவும் இல்லை, அது மட்டும் இல்லாமல் கழுத்தில் ‘O’ வடிவில் தான் அடையாளம் உள்ளதாம். தூக்குப் போட்டுக் கொண்ட அந்த நபரின் கழுத்தில் ‘U’ வடிவில் தான் அடையாளம் இருக்குமாம்.

அதைப்போல் கண்கள் வெளிவந்து, நாக்கு வெளிவந்து, நுரை தள்ளப்பட்டிருக்கும். ஆனால் சுஷாந்த் சிங்கின் தற்கொலையில் அப்படி எதுவும் அடையாளங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் டைரி எழுதும் பழக்கம் உடையவராம், அவரது டைரியிலிருந்து சில முக்கிய பாகங்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் தற்போது இது தற்கொலை அல்ல கொலை என்பது தற்காலிகமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது சி.பி.ஐ தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற வாக்குமூலங்களை சிபிஐ எடுத்துக் கொள்ளுமா என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top