India | இந்தியா
கூண்டோடு மாட்டிய பிரபல நடிகையின் குடும்பம்.. அடுத்து யார் என்ற மரண பயத்தில் திரையுலகம்
கடந்த ஜூன் 14 ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய திடீர் மரணத்திற்கு திரையுலகமே பதைபதைத்தது.
அதன்பின் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பண மோசடி கேஸ் ஆனது சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கரவர்த்தி மீது பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதன்பின் தலைமறைவான ரியா சக்கரவர்த்தி, இப்ப போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் அவரும் அவருடைய சகோதரன் ஷோயிக் சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளரான சாமுவேல் மிரண்டா ஆகியோர் தற்போது போதை தடுப்பு பிரிவு போலீசாரால் குண்டுகட்டாக கைதாகினர்.
இப்படி என்னுடைய மகளையும் மகனையும் கைது செய்து நடுரோட்டில் இழுத்து அவமானப்படுத்தியவர்கள் வெலங்கவே மாட்டார்கள்… என்றும்.. ஒரு நடுத்தர வர்க்கத்தினரை இப்படியெல்லாம் அவமானப் படுத்துவது சரியா..? என்று முதலைக் கண்ணீர் வடித்து, ரியா சக்கரவர்த்தியின் தந்தை இந்திரஜித் சக்கரவர்த்தி பரபரப்பு பேட்டியை செய்தியாளர்களிடம் அளித்துள்ளார் .
எப்படி பார்த்தாலும் இந்த கேசை ஒண்ணுமில்லாம ஆக்குறதுக்கு ரியா சக்கரவர்த்தியின் தந்தை எக்கச்சக்கமான பிளான்களை கைவசம் வைத்திருப்பது அம்பலமாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட முன்னணி நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் இப்போது ரியா சக்கரவர்த்தியும் மாட்டிக்கொண்டதால், இன்னும் யார் யார் இந்த சம்பவத்தில் சிக்கி போகிறார்களோ? என்று திரையுலகிற்கே வயிற்றில் புளியை கரைக்கும் அளவுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது இந்த கேஸ்.
