India | இந்தியா
71 வயது இயக்குனருடன் தொடர்பில் இருந்தாரா சுஷாந்த் சிங் காதலி? வெட்ட வெளிச்சமாகும் அந்தரங்க தகவல்கள்
சில தினங்களுக்கு முன்பு மும்பையில் தனது வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற இந்த சூழ்நிலையில் அவரது காதலி கைது செய்யப்படலாம் என்ற செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சுஷாந்த் சிங் தன்னுடைய சொத்துக்களை 3 தனியார் கம்பெனியில் இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளதாகவும், அதில் இரண்டு கம்பெனிகளுக்கு தனது காதலி ரியா சக்ரபோர்த்தியை டைரக்டராக அமர்த்தியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் 71 வயது மகேஷ் பட்டுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், அதுவும் சுஷாந்த்க்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர்களுக்கு இடையே பல சண்டைகள் வந்து மன வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுஷாந்த் காதலியை கிட்டத்தட்ட 11 மணிநேரம் விசாரித்த போலீசார், அதன் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பட் என்பவர் பிரபல இயக்குனர்,தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் ஆலியா பட் தந்தையாவார்.

sushant-riya-cinemapettai
இதற்கேற்ற வகையில் மகேஷ் பட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சுஷாந்த் மற்றும் ரியா உடனடியாக பிரேக்கப் செய்ய வேண்டும். ரியா, சுஷாந்த் சிங்க்கு பொருத்தமானவர் அல்ல, அவருடைய நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைச் தகவல்கள் வெளிவந்து உள்ளது. இதுவரை 15 பேருக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
இவர் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் காதலி சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்திருக்கலாமா.? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
தற்போது சுஷாந்த் சிங் தற்கொலைக்கு ஆன விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. தோனி வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகம் எடுத்ததாக இருந்ததும் கைவிடப்பட்டதாக இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
