இயக்குனர் சுசீந்திரன் கமேற்சியால் சினிமா, ஜனரஞ்சக கருத்துள்ள சினிமா என இரண்டு ஜானரிலும் கை தேர்ந்தவர். இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘ஏஞ்சலினா’.இப்படத்தில் பரோட்டா சூரியின் மகன் சர்வான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஏஞ்சலினா

இந்த படத்தை தொடர்ந்து சுசீந்திரன் தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார். தனது அடுத்த படத்திற்கு ‘ஜீனியஸ்’ என்று பெயரிட்டுள்ளார் சுசீந்திரன்.

இந்த படத்தில் முற்றிலும் புதுமுக நடிகர்களே நடிக்க உள்ளார்கள். இன்று படப்பிடிப்பு துவங்குவதாக தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சுசீந்திரன் ‘‘இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால் அவர்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை என ஒரு கதாபாத்திரத்தை சுற்றி இப்படத்தின் கதை அமைத்துள்ளேன். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும் என நம்புகிறேன் ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Genius – Suseenthiran

இந்த படத்தில் நடிப்பவர்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்கள் எதையும் சுசீந்திரன் வெளியிடவில்லை.