Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது சசிகுமார் – பாரதிராஜாவை வைத்து சுசீந்திரன் இயக்கும் ஸ்போர்ட்ஸ் பட டைட்டில் போஸ்டர் .
சுசீந்திரன்
கமெர்ஷியல் படம். ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என்று விதவிதமாக எடுத்து அசத்துபவர் சுசீந்திரன். இவர் ஏற்கனவே வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களை விளையாட்டை மையமாக வைத்து எடுத்து, அதில் வெற்றியும் கண்டார்.

Champion
மனிதர் ஏகத்துக்கு பிஸி. படிப்பை மையப்படுத்தி ஜீனியஸ் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக ஏஞ்சலினா படமும் முடிந்துவிட்டது. கால்பந்தாட்டத்தை மயாயப்டுத்தி சாம்பியன் என்ற படமும் ஆரம்பித்து விட்டார். இது மட்டுமன்றி மைக்கேல் ராயப்பாவின் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்திலும் நடித்து முடித்து விட்டார்.
கென்னடி க்ளப்
இப்படம் பெண்கள் கபடியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது.

Kennedy Club
இதுவே இவர் இயக்கும் அடுத்த பட தலைப்பு. இயக்குனர் சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, வழக்கம் போல சூரி நடிக்கின்றனர். மாவீரரான கிட்டு படத்தை இணைந்து தயாரித்த நல்லுசாமி பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். இமான் இசை, ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் ஆண்டனி.
