Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடந்த 10 வருடங்களில் ஒன்பது இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ள சசிகுமார். இயக்குனர் சுசீந்திரன் பகிர்ந்த முழு லிஸ்ட்.

இயக்குனர் சசிகுமார்

இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பிஸி மனிதர். பாலா, அமீர் இருவரிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்து, 2008 இல் சுப்ரமணியபுரம் வாயிலாக இயக்குனர் – நடிகர் அவதாரம் எடுத்தார். அதன் பின் இவர் சினிமா க்ராப் ஏற்றத்தில் தான் உள்ளது.

சில தினங்களுக்கு முன், இவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்தது. ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளார். சதிஷ் முக்கிய ரோலில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார். கதிர் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் துவக்கத்திற்கு வாழ்த்து சொல்லிய சுசீந்திரன், தான் இந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். கடந்த 2009 இல் இருந்து தற்பொழுது வரை ஒன்பது இயக்குனர்களை அறிமுகம் செய்துள்ளார் சசிகுமார்.

அதில் பாண்டியராஜின் பசங்க படத்தில் மட்டும் தயாரிப்பாளர் மட்டுமே. அதன் பின் பிரபாகரன் – சுந்தரபாண்டியன், குட்டி புலி – முத்தையா, பிரம்மன் – சாக்ரடீஸ், வெற்றிவேல் – வசந்தா மணி, கிடாரி – பிரசாந்த் முருகேசன், பலே வெள்ளையத்தேவா – சோலை பிரகாஷ், அசுரவதம் – மருதுபாண்டியன், தற்பொழுது கதிர் என இவர் நடித்துள்ளார்.

sasikumar suseenthiran

இந்த தகவலை பகிர்ந்து தான் சசிகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top