Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்த சுசீந்திரன்.! நடிகர் யார் தெரியுமா.?

இயக்குனர் சுசீந்திரன் படத்திற்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு இருக்கும், இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் நெஞ்சில் துணிவிருந்தால், இந்த படத்தை தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு-2, ஜீனியஸ், ஏஞ்சலினா, ஆகிய திரைப்படங்களை இயக்கயிருக்கிறார்.
இதில் ஜீனியஸ் திரைப்படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது, இந்த நிலையில் தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்துள்ளார், படத்திற்கு “கென்னடி கிளப்” என டைட்டில் வைத்துள்ளார்கள்.
படத்தில் ஹீரோவாக இயக்குனர் சசிகுமார் நடிக்க இருக்கிறார் படத்தை நல்லுசாமி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, மற்றும் கதை இயக்கம் அனைத்தும் சுசீந்தரன் தான். படத்திற்கு D இமான் இசையமைக்க இருக்கிறார், அதுமட்டுமில்லாமல் காமெடி நடிகர் பரோட்டா சூரி நடிக்கிறார் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
