சுசீந்திரன்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர். தன்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் அடைத்துக்கொள்ளாமல் பல ஜானர்களில் படம் எடுப்பவர். கமெர்ஷியல் படம். ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என்று விதவிதமாக எடுத்து அசத்துபவர்.

Susintheeran family photo

இவர் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மஹான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, அழகர்சாமியின் குதிரை போன்றவை சூப்பர் ஹிட்.

 

ஏஞ்சலினா

Angelina

சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து ரிலீசாக உள்ள படம். இதன் ஷூட்டிங் முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது, இந்நிலையில் தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை இயக்குனர் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை சார்ந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்பொழுது உலகம் முழுவதும் அதிகம் விளையாடப்படும் Football விளையாட்டை கதைக்கருவாக எடுத்துள்ளார்.

suseenthiran football movie

இப்படத்தில் சிறந்த அசல் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களை நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளார். 15 – 25 வயது மதிப்புள்ள கால்பந்தாட்ட வீரர்கள் தங்களில் போட்டோ மற்றும் பயோ டாட்டாவை teamfootball2018@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த படமம் புது முக விளையாட்டு வீரர்கள் பலரின் நடிப்பில் உருவாக உள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.