சுசீந்திரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆவார் இவர் முதலில் இயக்கிய படம் வெண்ணிலா கபடி குழு இந்த படத்திற்காக இவர்  சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது, தகுதிக்கு செலக்ட் ஆனார்.

suttu-pidikka-utharavu

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் படம் சுட்டு பிடிக்க உத்தரவு தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா என்பவர்  சுட்டு பிடிக்க உத்தரவு படத்தை இயக்குகிறார்.

suttu-pidikka-utharavu

இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின்,சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படம் குற்ற சம்பவத்தை பின்னணியாக உருவாகி வருகிறது கதை, படத்தில் விக்ராந்த்,மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.

suttu-pidikka-utharavu

அவர்கள் வேலைபார்த்து கொண்டிருக்கும் பொழுது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஓன்று நடக்கிறது,இந்த சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார்.

suttu-pidikka-utharavu

திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது,தற்பொழுது படபிடிப்பு நேற்று துவங்கியுள்ளது இந்த படத்தில் தான் இயக்குனர் சுசீந்திரன் முதல் முறையாக நடிகராக நடிக்கிறார்.இதுகுறித்து மகிழ்ச்சியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

suttu-pidikka-utharavu

அதில், இன்று என்னால் மறக்க முடியாத நாள். கடந்த 2009 ஜனவரி 29-ல் தான் `வெண்ணிலா குழு’ படத்தை ரிலீஸ் செய்தோம். இன்று அதேநாளில் நான் நடிகராக அறிமுகமாகும் `சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.