Tamil Cinema News | சினிமா செய்திகள்
4 படங்களை ஒரே நேரத்தில் இயக்கும் சுசீந்திரன்.. அறுக்கத் தெரியாதவருக்கு 58 அருவாள் கதைதான்!
தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் தான் சுசீந்திரன். இவர் பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, நான் மகான் அல்ல போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
தற்போது சுசீந்திரன், சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தை வெறும் நாற்பதே நாட்களில் உருவாக்கி மொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தப் படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்த அடுத்ததாக மூன்று படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த தகவலை கேட்ட கோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அதாவது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஏஞ்சலினா’ என்ற படம் பாதி சூட்டிங் முடித்து, அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.
மறுபுறம் ஜெய்யை வைத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறாராம் சுசீந்திரன். இந்தப் படங்களில் ஒன்றிற்கு ‘சிவசிவா’ என்று பெயரிட்டு இருக்கிறார் சுசீந்திரன். இதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி என்பவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுசீந்திரன் எப்படி இவ்வளவு வேலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது.
அதாவது சுசீந்திரனின் மேற்பார்வையின் கீழ் துணை இயக்குனர் குழு அந்தந்த படங்களின் வேலையை கவனித்துக் கொள்கிறார்களாம். அதனால்தான் சுசீந்திரனால் ஒரே நேரத்தில் நான்கு படங்களை உருவாக்க முடிகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
எனவே இவ்வாறு ஒரே நேரத்தில் நான்கு படங்களை விதவிதமாக தயாரித்துக் கொண்டிருக்கும் சுசீந்திரனின் திறமையை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதே போல் தான் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்குவதாக கூறி வெண்ணிலா கபடி குழு 2, கென்னடி கிளப், சாம்பியன் ஆகிய படங்கள் மிகப் பெரிய பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.
