Tamil Cinema News | சினிமா செய்திகள்
எப்படி இருந்த சுசீந்திரன்! கடைசியில் போயும் போயும் இந்த நடிகர்களுடன் கூட்டணியா?
தமிழ் சினிமாவில் எதார்த்த கதைகளை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு வரவேற்பை பெற்று வைத்திருந்தவர் சுசீந்திரன்.
2009 ஆம் ஆண்டு வெளியான வெளிநாட்டு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுசீந்திரன் சமீபகாலமாக ஒரு ஹிட் கொடுக்க தடுமாறி வருகிறார்.
அவர் கடைசியாக இயக்கிய 6 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியை சந்தித்து சுசீந்திரனுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் விஜய் ஆகியோரை வைத்து படம் இயக்க இருந்த சுசீந்திரன் தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களுடன் கூட்டணி சேர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.
படம் தரமானதாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என இரண்டாம் கட்ட நடிகர்களான ஜெய் மற்றும் ஆதி ஆகிய இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற டயலாக் இவருக்கு சரியாக பொருந்தும் என்கிறது கோலிவுட்.
