fbpx
Connect with us

Cinemapettai

தேடிப்போய் பாழங்குழியில் விழுந்த சுசீந்திரன்.. போயும் போயும் இந்த ஹீரோ உடன் கூட்டணியா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேடிப்போய் பாழங்குழியில் விழுந்த சுசீந்திரன்.. போயும் போயும் இந்த ஹீரோ உடன் கூட்டணியா?

தமிழ் சினிமாவில் எதார்த்தமான திரைப்படங்களை கொடுத்து சில வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்படும் இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன். கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த எந்த படமும் வெற்றியை பெறவில்லை.

விமர்சக ரீதியாக வெற்றியை பெறும் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்து வருவதால் பெரும்பாலான தயாரிப்பாளர்களை சுசீந்திரனை ஒதுக்கி விட்டார்கள்.

எப்படியாவது மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் சுசீந்திரன்.

அடுத்ததாக விஷால், சசிகுமார் போன்றோருடன் கூட்டணி சேருவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தலையில் இடியை போட்டது போல சுசீந்திரன் நடிகர் ஜெய் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

தமிழ்சினிமாவில் உள்ள கெட்ட ஹீரோக்களில் ஒருவர் தான் ஜெய். படமே ஓடவில்லை என்றாலும் வந்தா பண்ணுவதில் குறைச்சல் இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் இவர்மீது ஒரு தவறான பேச்சு உள்ளது.

இந்த நேரத்தில் சுசீந்திரன் ஜெய்யுடன் கூட்டணி அமைப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடிக்கும் புதிய படம் ஒன்றை சுசீந்திரன் இயக்க உள்ளார்.

இதில் நாயகியாக திவ்யா துரைசாமி என்ற செய்தி வாசிப்பாளர் நடிக்க உள்ளார். நான் தலை கீழாகத்தான் குதிப்பேன் என முடிவெடுத்த சுசீந்திரன் பார்த்து தற்போதைய கோலிவுட் வட்டாரம் ஏளனமாய் சிரிக்கிறது.

ஹீரோவை நம்பாமல் கதையை நம்பும் சுசீந்திரன் கண்டிப்பாக வெற்றி இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

Continue Reading
To Top