Connect with us
Cinemapettai

Cinemapettai

dilpachara-movie-review

Reviews | விமர்சனங்கள்

ரஜினி ரசிகராக நடித்த சுஷாந்த் சிங்! தில் பேச்சாரா திரைவிமர்சனம்

மறைந்த நடிகர் சுஷாந்தின் கடைசி படம். அறிமுக இயக்குனர் முகேஷ் சப்ராவின் இப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் OTT தளத்தில் நேற்று மாலை வெளியானது. இப்படம் 2012 ல் ஜான் கிரீன் என்பவர் எழுதிய “THE FAULT IN OUR STARS” என்ற நாவலின் தழுவல் தான்.

கதை – தைராய்டு கேன்சரால் அவதிப்படும் மிகவும் வெறுப்பான வாழ்க்கையை தொடரும் ஹீரோயின் கிஸி பாஸு. கால் எலும்பில் கேன்சர் காரணத்தால் அறுவை சிகிச்சை முடித்து வாழும் மேன்னி ரோலில் ஹீரோ சுஷாந்த் சிங். தன் மற்றோரு நண்பருடன் இணைந்து படம் ஒன்றை எடுத்து வருகிறார் ஹீரோ. தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர்களின் படத்தில் ஹீரோயினாக நடிக்கவே கிஸியை அணுகுகிறார். முதலில் பயம் கலந்த வெறுப்பு, பின்பு நட்புடன் காதலும் இணைந்து அழகாக நகர்கிறது திரைக்கதை.

தனக்கு மிகவும் பிடித்த தனிப்பாடகர் அபிமன்யு வீர் என்பவரை சந்திக்க வேண்டும் எனவும், ஏன் அவர் கடைசி பாடலை முடிக்கவில்லை என் கேட்க வேண்டும் என்ற தனது ஆசையை விவரிக்கிறார் கிஸி. சுஷாந்த் அந்த பாடகர் பாரிஸில் இருப்பதை அறிகிறார். அங்கு சென்று அவரை சந்திக்க முடிவெடுத்து செல்கின்றனர். ஆனால் அவர் (சைப் அலி கான்) காதலின் வலியை பற்றி சொல்லி இவர்களை அனுப்பி விடுகிறார்.

தனக்கு மீண்டும் கேன்சர் அதிவேகமாக பரவுவதை ஹீரோயினிடம் சொல்கிறார் சுஷாந்த். பின்னர் அவரின் மனப்போராட்டம், எவ்வாறு படத்தை முடித்தார் தனது மரணத்திற்கு முன் என்பதே மீதி கதை.

சினிமாபேட்டை அலசல் – கலைஞன் சாகலாம், ஆனால் கலை நிலைத்திருக்கும் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. பப்லியாக ஆரம்பித்து, கடைசி 20 நிமிடங்களில் கேன்சர் நோயாளிகள் படும் பாட்டை நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார் சுஷாந்த். நடிகர் நடிகைகளின் அருமையான தேர்வும், ஒளிப்பதிவும், ரஹ்மானின் இசையும் படத்திற்கு பிளஸ்.

சினிமாப்பாட்டை வெர்டிட் -1 மணிநேரம் 42 நிமிடங்கள் ஓடும் நேரம் உள்ள படம். பெரிதாக மெஸேஜ் சொல்லும் நோக்கம் எதுவும் படக்குழுவுக்கு இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது தான் இப்படத்தின் நோக்கம். கஷ்டங்களை நினைத்து கவலைப்படாமல் இருக்கும் வாழ்க்கையை ரசித்து வாழணும் என்பதே படத்தின் ஒன் லயன்.

சுஷாந்த் – படத்தின் ஓப்பனிங் காட்சிகளில் நமது அன்றைய காலத்து நவரச நாயகன் கார்த்திக் போன்ற ஜாலி ரோலில் அறிமுகமாகிறார். கடைசி 20 நிமிடங்களில் நடிகனாக கலக்கியுள்ளார். படத்தில் அவர் சாவை நெருங்கும் காட்சிகளில் நமக்கும் பதைபதைப்பு அதிகமாகிறது.

ஹாட்ஸ்டாரில் மெம்பெர்ஷிப் இல்லாதவர்களுக்கும் இப்படம் பிரீ ஸ்ட்ரீம் செய்கிறார்கள். இதுவே சுஷாந்திற்கு அவர்கள் செலுத்தும் அஞ்சலி.

சினிமாபேட்டை ரேட்டிங் – சில படங்களை பார்த்து அனுபவிப்பதுடன் விட்டு விட வேண்டும். ரேட்டிங் என்ற வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது. அப்படி பட்ட படமே இது.

Continue Reading
To Top