எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுசானாவின் மகன் நைடன் ஆர்யாவிடம் ஒரு கோரிக்கை வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ரியாலிட்டி ஷோக்கள் தமிழகத்தை கதறவிட்டு கொண்டு இருக்கிறது. இந்தியில் வெற்றி பெற்ற பிக்பாஸின் தமிழ் சீசன் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. ஒரு வீட்டில் 15 பிரபலங்கள் எந்த வித தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் இருக்க வேண்டும். 100நாட்கள் தாக்கு பிடிப்பவர்களுக்கு தான் பரிசு.

சரி அப்போ இந்த வருடத்தை யார் பேலன்ஸ் செய்வா? பிக்பாஸ் சீசன் 2 வரும் என காத்திருந்தனர் தமிழ் ரசிகர்கள். ஆனால், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி அந்த இடத்தை நிரப்ப ஒளிபரப்பப்பட்டது. இங்கு பரிசாக அறிவிக்கப்பட்டது ஆர்யாவின் மனைவியாகும் வாய்ப்பு. 16 பெண்கள் அந்த போட்டியில் கலந்து கொண்டனர். இறுதி போட்டிக்கு சுசானா, அகாதா மற்றும் சீதா லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மூவருக்கும் ஒரு திருமண பெண்ணுக்கு உரிய எல்லா நடைமுறைகளும் நடத்தியது டிவி நிர்வாகம். ஆனால், இறுதி மேடையில் ஒருவரை தேர்ந்தெடுத்து மற்ற இருவரை நான் கஷ்டப்படுத்தவில்லை என பின்வாங்கினார் ஆர்யா. ரியாலிட்டி ஷோக்களின் எத்திக்கள் அங்கே உடைக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதி போட்டியில் இருந்த போட்டியாளர்களை பல யூ ட்யூப் சேனல்கள் பேட்டி எடுத்து வருகிறது. சுசானா தனது சமீபத்திய பேட்டியில், தனது மகன் நைடனுக்கு விஜய் என்றால் கொள்ளை பிரியமாம். இதனால், ஆர்யாவை பார்க்கும் போது விஜயை பார்க்க கூட்டி செல்லுங்கள் என கோரிக்கை விடுத்து இருக்கிறார். அது நடக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.