Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-40-41-42-43

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் வாடிவாசல் படம் டிராப் ஆனதா? வெளியாகி உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் தான் நடிகை சூர்யா. இவருக்கென்று தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அந்த வகையில் சூர்யாவின் வாடிவாசல் படத்தை அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில் வாடிவாசல் படம் டிராப் ஆகி விட்டது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி S. தாணு தயாரிக்கிறார். மேலும் அசுரன் படத்தை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறனுடன் ஜிவி பிரகாஷ் சூர்யாவின் வாடிவாசலிலும் இணைகிறார்.

இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படம் டிராப்பாகிவிட்டதாக பரப்பப்பட்ட தகவல் முற்றிலும் வதந்தி என விசாரித்த நிலையில் தெரியவந்துள்ளது.

ஏனென்றால் வாடிவாசல் திரைப்படம் திரையிட கொஞ்சம் தாமதமாகும் என்பது உண்மைதான்.

ஏனென்றால் வாடிவாசல் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் இன்னொரு படத்தில் கமிட்டாகி பிஸியாக உள்ளதால், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு தாமதமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியான வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது படம் தாமதமாக வெளியாகும் என்ற செய்தியைக் கேட்டதும் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

ஆனால் வாடிவாசல் படம் டிராப் ஆகவில்லை என்ற தகவலை கேட்டதும் ரசிகர்கள் மனதிருப்தி அடைந்துள்ளனர்.

suriya-sudha-kongara-2

suriya-sudha-kongara-2

Continue Reading
To Top