நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் பிப்ரவரி மாதத்திலும் பாடல்கள் மார்ச் மாதத்திலும் வெளியாகவுள்ளது.