ஹரியின் ‘சி 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு  சூர்யா நடிப்பில் பொங்கலன்று வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து செல்வராகவன் மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் புதிய படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார்.

gang

கே.வி.ஆனந்த் இயக்கம் படத்தில்  முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில், இச்செய்தி குறித்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இரண்டு தொகுப்பாளினிகள் நிவேதிதா மற்றும் சங்கிதா  சூர்யாவை கிண்டல் செய்தனர்.

nivetha and sangeetha
nivetha and sangeetha

“சிங்கம் படத்தில் அனுஷ்காவுடன் நடித்தபோதே சூர்யா ஹீல்ஸ் போட்டு தான் நடித்தார். அப்படி இருக்கையில், அமிதாப் பச்சனுடன் நடிக்கும்போது சூர்யா ஸ்டூல் போட்டுதான் நடிக்க வேண்டும்” என்றும் இன்னொருவர், “அமிதாப் பச்சனை இந்தப் படத்தில் உட்கார வச்சே தான் நடிக்க வைக்கணும்” என  சூர்யாவை நேரடியாக கலாய்த்தனர். இதனால் சூர்யா ரசிகர்களும், சில திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவருக்கும் எதிராக குரல் கொடுத்தனர்.

தற்போது, அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் வாசலில் சூர்யாவின் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது . இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தன் ரசிகர்களுக்காக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

Suriya

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

“நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை;  எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்.” என்று நிரூபித்துவிட்டார் சூர்யா. இதற்க்கு  அந்த தொகுப்பாளினிகள் அல்லது டிவி சானலில் பதில் தான் என்ன ??