Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

கார்ப்ரேட்டுக்கு எதிரானவன் காப்பான் – திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, ஆர்யா, மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி உள்ள . காப்பான் நம்மை காப்பாற்றியதா அல்லது கதற விட்டதா என வாங்க பார்ப்போம் ,,,

பிரதமந்திரியாக நேர்பட செய்யப்படும் மோகன் லால் அவரது  மகனாக ஆர்யா என ஒருபுறம். தஞ்சை அருகில் கிராமத்தில் விவசாயம் செய்துக்கொண்டும், ராணுவத்தின் ரகசிய செய்லபாடுகளை செய்யும் சூர்யா மறுபுறம். பிரதமரை காப்பாற்ற முயன்று பின்னர் அவரது ஸ்பெஷல் பாதுகாப்பு படையில் (SPG ) சேர்வதென நிதானமாக நகர்கிறது கதை.

உள்கட்சி பதிவு ஆசை, தொழிலதிபரின் அதிரடி வியாபார நோக்கு, டபிள் ஏஜெண்டாக இருந்து தனது நண்பர்களை அழிக்க முயலும் வில்லன் என கமெர்ஷியல் படத்திற்கான அத்தனையும் உள்ளது. இடையே சாயீஷாவின் காதல் வேறு. விவசாயத்தின் முக்கியம், தாது சத்தை சுருண்ட நினைக்கும் நிறுவனம், பாகிஸ்தானை வைத்து அரசியல் என இன்றைய தேதியின் பல விஷயங்களை தொட்டு நகர்கிறது படம்.

பிளஸ் – கதாபாத்திரங்களின் தேர்வு, கமெர்ஷியல் சினிமாவில் உள்ள சமூக அக்கறை

மைனஸ் – அதீத சினிமாத்தனம், சுமாரான இசை, தேவையற்ற பாடல்கள், படத்தின் ஓடும் நேரம்

சினிமாபேட்டை அலசல் – ஹாலிவுட்டில் London / Olympus had fallen படங்களை போன்ற ஸ்டைலில் தான் சூர்யா, பிரேம் மற்றும் சமுத்திரக்கனி வருகின்றனர். அதிலும் பல இடங்களில் செயற்கையே ஜாஸ்தி. ராணுவ வீரன் என்பதை தாண்டி விவசாயி என்ற இமேஜ் சூர்யாவுக்கு நன்றாக பொருந்தினாலும், அட NGK வின் தொடர்ச்சியே என்றே நக்கல் கமெண்ட்ஸ் வருகின்றது படம் பார்க்கும் ரசிகனிடம் இருந்து.

கே வி ஆனந்த் போன்ற இயக்குனர் திரைக்கதை அமைப்பில் சற்றே சறுக்கியது வருத்தமே அளிக்கிறது. எனினும் கமெர்ஷயல் சினிமா ரசிகர்களுக்கு திருப்த்தியை கொடுக்கும். பேமிலி ஆடியன்ஸ் சென்று ரசிக்க அனைத்தும் கலந்த கலவையே இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.5 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top