Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரைத்துறையில் சூர்யா பார்த்து மிரண்டு போன நடிகர், பிடித்த படம் தெரியுமா.? அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்!
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் சூர்யா. என்னதான் இவர் சினிமா பின்புலத்துடன் கால் பதித்திருந்தாலும், தனது அயராத உழைப்பினாலும், கடுமையான முயற்சியாலும் மட்டுமே இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
மேலும் இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பல சமூக சேவைகளையும் செய்து பலருக்கு முன்னோடியாய் விளங்கி வருகிறார். தற்போது சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவு பூர்த்தி செய்தது. இதனால் சூர்யாவை பலர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சூர்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு பிடித்தமான நடிகர் மற்றும் திரைப்படம் பற்றிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது சூர்யா ஒரு பேட்டியில், ‘நாயகன் தான் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அதிலும் அக்னி நட்சத்திரம் மற்றும் நாயகன் என இரண்டு மெகா ஹிட் படங்களையும் ஒரே நேரத்தில் எப்படி மணிசார் எடுத்தாருன்னே தெரியல!’ என்று கூறியிருக்கிறார்.

nayagan-cinemapettai
அதுமட்டுமில்லாமல் தான் ஒரு கமல் ரசிகன் என்றும், இன்றுவரை அவரது அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்தால் தனக்கு வியப்பாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தத் தகவல்கள் தற்போது சூர்யாவின் ரசிகர்களால் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
