ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

எங்கேயோ இடிக்குதே.. வன்மம் இருக்கு.. வாழ்த்தை இப்படியும் சொல்லலாம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “கங்குவா”. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சூர்யா தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி இருக்க, சமீபத்தில் கூட சூர்யாவை விஜய் ரசிகர்கள் சற்று வெறுப்பேற்றினார்கள். ப்ரோமோஷனுக்கு போன இடத்தில், தளபதி என்று கத்தியது, அவருக்கு முக சுழிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், என்ன தான் அதற்க்கு ரியாக்ட் செய்யாமல் கடந்து வந்தாலும், தற்போது, லைட்டா அந்த வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்

பெயர் சொல்லாமல் வாழ்த்து

இந்தியாவில் 35 மொழிகளில் ஒட்டுமொத்தமாக 6000 திரையரங்குகளில் “கங்குவா” திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் படத்தில் 10 வெவ்வேறு கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் பிரபலங்களான திஷா பட்டாணி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் மக்களை மிரள வைத்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்திற்க்கு அதீத எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்திற்கான எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் நடந்துகொண்டிருக்கும் தவேக மாநாடு-க்கு மக்கள் திரளாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

இப்படி இருக்க, பெயர் குறிப்பிடாமல், தளபதி விஜய்க்கு சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த இசை வெளியீட்டு விழாவில் தான் சூர்யா பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து கூறியுள்ளார். “என் நீண்ட கால நண்பர்… நாளை புதிய பாதையில்.. ஒரு புதிய பயணத்தை தொடங்குகிறார்… அவருடைய வரவு நல்வரவாக இருக்கட்டும்” என விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து தெரிவிருத்திருந்தார்.

இந்த நிலையில், இதை பலர் விமர்சிக்கின்றனர். “நீண்ட கால நண்பர்-ன்னு மட்டும் சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார்.. ஒருவேளை பெயரை குறிப்பிட்டால் மறுபடியும், தளபதி என்று யாரென்னும் கத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்று இப்படி கூறியுள்ளாரா? என்ன தான் இருந்தாலும், உள்ள லைட்டா வன்மத்தோட பேசுற மாதிரி இருக்கே..” என்றும் விமர்சித்து வருகிறார்கள்

- Advertisement -spot_img

Trending News