Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் இணைகிறதா ‘ஆயுத எழுத்து’ கூட்டணி. வைரலாகுது மாதவனை டேக் செய்து சூர்யா பதிவிட்ட ட்வீட்.
ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்
மாதவன் நடிக்கும் புதிய படம். ஆனந்த மஹாதேவன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் ஹிந்தியில் இப்படம் ரிலீஸாவது உறுதியாகி உள்ளது, பிற மொழிகளிலும் டப் செய்ய வாய்ப்புள்ளது.

R Madhavan as Nambi Rajan
திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஆய்வு நடந்த சமயத்தில், திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் நம்பி நாராயணன். 1994ம் ஆண்டு தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்றதாக மத்திய புலனாய்வுத்துறை இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நம்பி நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுவித்தது.
இந்த சம்பவம் தான் கதைக்களம். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் நாளை வெளியாக்கப்போவதாக மாதவன் தன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
Rocketry-Tamil First call.
?????? pls Share punnange yen uuyer Nanbargale??? https://t.co/OzsrYTxlLr— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 29, 2018
இந்த ஸ்டேட்டஸுக்கு தான் சூர்யா பதில் தந்துள்ளார். “இது அருமையான விஷயம். ப்ரோ மாதவா இந்த கனவில் நானும் இணைய விரும்புகிறேன். நம் மனது சொல்வதை செய்வோம்.” என்பதே அது.
This is Fantastic !! @ActorMadhavan Brother I would love to be a part of this dream! Let’s do what our heart says!!! https://t.co/lQrBo5VUO4
— Suriya Sivakumar (@Suriya_offl) October 29, 2018
நம்பி எழுதிய ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ புத்தகத்தை அடிப்படையாக கொண்டே இப்படம் ரெடி ஆகியுள்ளது. இந்நிலையில் சூர்யா இது போன்ற டீவீட்டை தட்டி விட, இப்படத்தில் அவர் நடிப்பாரா, அல்லது தனது 2 டி நிறுவனம் வாயிலாக விநியோகம் செய்ய ஆசைப்படுகிறாரா என்பது புரியாமல் குழம்பி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.
