ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கி வரும் எந்திரன் படத்தின் 2 ஆம் பாகமான 2.0 படத்தின் ரிலீஸ் தேதியில் குழப்பம் நிலவியது. 2018 ஜனவரி 26 அன்று வெளியாகும் என்ற முந்தைய அறிவிப்புக்கு மாறாக, ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என்ற வதந்தி பரவியது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2.0 திரைப்படம் 2018 ஜனவரி 26 அன்று வெளியாவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சூர்யா, விக்ரம் போன்ற ஹீரோக்களை சற்றே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏன் என்றால்

2.0

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்பட்ட, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

அதிகம் படித்தவை:  கௌதம் மேனன் இயக்கத்தில் மிண்டும் நடிப்பிர்களா? சூர்யாவின் பதில்

தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட் நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது. இப்படத்தில் ஆர் ஜெ பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம் – தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் ஸ்கெட்ச். வட சென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  சூர்யாவின் சொடக்கு மேல சொடக்கு பாடலில் இந்த வரியை மட்டும் கேட்டால் பா.ஜ.க பற்றிக்கொண்டு எரியுமே..!

இப்படத்தில் விக்ரம், தமன்னா உடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேல.ராமமூர்த்தி, சாரிகா, பிரியங்கா, மலையாள நடிகர் ஹரீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

vikram

2.0 படம் நிச்சயமாக 2018 ஜனவரியில் வராது என்ற நம்பிக்கையில் இவ்விரு படம் சம்மந்தப்பட்டவர்கள் அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டிய நிலையில் தற்போதைய தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே நேரம், ஒருவேளை 2.0 தள்ளிப்போனால் நம்ம படத்தை வெளியிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.