2007 ம் ஆண்டு சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய படம் தான் வேல் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தீபாவளி நேரத்தில் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்துடன் தான் அழகிய தமிழ் மகன், பொல்லாதவன் ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

surya

சூர்யா நடித்த வேல் திரைப்படம் மெகா ஹிட் ஆனது இந்த திரைப்படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவலை இயக்குனர் ஹரி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.ஐயா திரைப்படத்தின் கதையை எழுதி முதலில் ரஜினியிடம்தான் சொன்னாராம் அந்த சமையத்தில் ரஜினியால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

பின்பு வேல் திரை படத்திற்கு கதை எழுதினார் அதுவும் ரஜினிக்காக தான் ஆனால் ஹரி அந்த கதையை ரஜினியிடம் கூறாமலேயே சூர்யாவை நடிக்க வைத்துவிட்டாராம். அதன் பின்பு ரஜினி இயக்குனர் ஹரியை சந்திக்கும் பொழுது இந்த கதையை ஏன் என்னிடம் கூறவில்லை என செல்லமாக திட்டினாராம் ரஜினி, வேல் திரைப்படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனதால் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்கள்.