உலகையே தன் உள்ளங்கையில் கையில் வைத்திருக்கும் வலைத்தளம் கூகுள். ஒரு நாள் இந்த வலைத்தளம் இயங்காவிட்டால் பல்லாயிரம் கோடிகள் நட்டம் ஏற்படும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் கூகுளின் ஆளுமை உள்ளது.

தற்போது இந்த கூகுள் நிறுவனத்திற்கு நடிகர் சூர்யா தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா நடத்திக் கொண்டிருக்கும் அகரம் பவுன்டேஷனின் யாவருக்கும் கல்வி என்னும் திட்டத்திற்கு கூகுள் தனது ஆதரவை தருவதாக அறிவித்துள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சூர்யா தனது நன்றியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சினிமா பேட்டை சார்பாகவும் சமூக அக்கறை கொண்ட கூகுளுக்கு எங்கள் நன்றிகள்.

அதிகம் படித்தவை:  சூர்யாவுக்கு பிரம்மாண்ட கட்-அவுட்! எத்தனை அடி தெரியுமா.?