Tamil Cinema News | சினிமா செய்திகள்
தானா சேர்ந்த கூட்டம் , தமிழ் நாட்டில் முதல் ஐந்து நாள் வசூல்-தெரிக்கவிட்ட சூர்யா.!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கலையரசன், செந்தில், ரம்யாகிருஷ்ணன், கார்த்திக், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.
இப்படம் தமிழில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா .
மேலும் இப்படத்தினை தெலுங்கிலும் கேங் என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர். அங்கு படம் வெளியாகி மாஸ் கலெக்ஷன் குவித்து வருகிறது.
அங்கு படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக தன் ரசிகர்களை சந்திக்க ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் சூர்யா.
இந்நிலையில் ராஜமுந்திரியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சூர்யா சென்றபோது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
கட்டுக்கடங்காமல் அவர் ரசிகர்கள் நடந்துகொண்டதால் வேறு வழியில்லாமல் சூர்யா மூடிய கேட்டின் மீதேறி மறுபக்கத்திற்கு தாவியுள்ளார். அவருடைய செயல் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் வசூல் நிலவரம் வெளியே வந்துள்ளது,படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ் நாட்டில் முழுவதும் 46 கோடியும், உலகம் முழுவதும் இதுவரை 62.79 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
முதல் நாள் – Rs. 7.24 cr, இரண்டாவது நாள் – Rs. 8.91 cr, மூன்றாவது நாள் – Rs. 9.32 cr, நான்காவது நாள் – Rs. 9.46 cr , ஐந்தாவது நாள் – Rs.9.01 Cr, மொத்தம் இதுவரை – Rs. 44.94 cr.
