Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலகம் முழுவது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மொத்த வசூல் விவரம்.! எவ்வளவு தெரியுமா.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கலையரசன், செந்தில், ரம்யாகிருஷ்ணன், கார்த்திக், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.
இப்படம் தமிழில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா .
மேலும் இப்படத்தினை தெலுங்கிலும் கேங் என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர். அங்கு படம் வெளியாகி மாஸ் கலெக்ஷன் குவித்து வருகிறது.
அங்கு படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக தன் ரசிகர்களை சந்திக்க ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் சூர்யா.இந்நிலையில் ராஜமுந்திரியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சூர்யா சென்றபோது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
கட்டுக்கடங்காமல் அவர் ரசிகர்கள் நடந்துகொண்டதால் வேறு வழியில்லாமல் சூர்யா மூடிய கேட்டின் மீதேறி மறுபக்கத்திற்கு தாவியுள்ளார். அவருடைய செயல் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புதிய சூர்யாவை பார்த்தோம் என கூறி ரசிகர்கள் மகிழ்ந்தார்கள்.மேலும் வசூல் விவரம் வெளி வந்துள்ளது.
இந்த படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 37 கோடி வரை வசூல் சேர்த்துள்ளது,அது மட்டும் இல்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இதுவரை 12 கோடி வரை வசூலும்.கர்நாடகாவில் 5 கோடியும்,கேரளாவில் இதுவரை 5 கோடியும் வசூல் சேர்த்துள்ளது.
மேலும் உலகம் முழுவதும் இந்த படம் தற்போது வரை ரூ 70 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறிவருகிறார்கள்.
