தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட் நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது.

இப்படத்தில் ஆர் ஜெ பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் இயக்குநர் விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார்.

surya thana sernthu kootam

பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதி வந்தாலும், தனது படங்களுக்கு ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடலாசிரியர்களோடு பணிபுரிந்து வந்தார் விக்னேஷ் சிவன். முதன் முறையாக இப்படத்தின் அனைத்துப் பாடல்களையுமே இயக்குநர் விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார்.

படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்தபிறகு தான் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்த விக்னேஷ் சிவன், அதன்படியே சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியிட்டார்.

surya

இந்த போஸ்டரை, 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்து, விஜய்யின் ‘மெர்சல்’ சாதனையை முறியடித்துள்ளனர். அதுவும் போஸ்டர் வெளியான இரண்டு நாட்களிலேயே இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது.தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி படித்துறையில் பாடல் காட்சிகள் படமாக்க முயன்றபோது புரோகிதர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

திருவையாறு காவிரி படித்துறையில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகள் நடக்கும். தினம்தோறும் சுமார் 50 புரோகிதர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

surya

நேற்று தானா சேர்ந்த கூட்டம் படத்தின் குழுவினர் காவிரி படித்துறைக்கு வந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்கான அனுமதி பெற்றிருக்கிறோம். நீங்கள் எழுந்து செல்லுங்கள் என்று புரோகிதர்களை விரட்டி உள்ளனர். இதையடுத்து புரோகிதர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

“காவிரி படித்துறை புனிதமானது, இங்கு சடங்குகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். படப்பிடிப்புக்கு அனுமதிக்க முடியாது மீறினால் நாங்கள் மறியல் போராட்டம் நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் போலீசார் படப்பிடிப்பு குழுவினரிடம் “நீங்கள் அனுமதி பெற்றிருந்தாலும் இப்போது படப்பிடிப்பு நடத்த முடியாது. சடங்குகள் நடக்காத நாளில் வாருங்கள்” என்று கூறி படப்பிடிப்பு குழுவினரை திருப்பி அனுப்பினார்கள்.