சிவகார்த்திகேயன் இயக்குனருடன் கூட்டணி போடும் சூர்யா.. 300 கோடி வசூலுக்கு போடப்போகும் புது அவதாரம்

சூர்யாவுக்கு தொடர்ந்து மிகப் பெரிய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இவருடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யா நடித்த சூரரை போற்று, ஜெய் பீம் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

மேலும் தற்போது ஆஸ்கர் குழு உறுப்பினராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது சூர்யா பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சூர்யாவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் உடன் சூர்யா இணைந்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா படத்தை இயக்கும் வாய்ப்பு ரவிக்குமாருக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே ரவிகுமார் இந்த படத்திற்கான குழுவை ஒருங்கிணைத்த உள்ளார். மேலும் இப்படத்தின் பெரும்பான்மையான பகுதி சென்னையில் படமாக்கப்பட உள்ளது. இதனால் சென்னையில் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட செட் அமைக்கப்படயுள்ளது. மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு 2023 இல் ஜனவரி மாதம் தொடங்கயுள்ளது.

இப்படம் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் விதமான கதை களம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா ஒரு விஞ்ஞானியாக நடிக்க உள்ளார். சூர்யா இதுவரை விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. முதல்முறையாக முறையாக இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகி மற்றும் பிற நடிகர்களின் தேர்வு விரைவில் தொடங்கும் என நம்பக தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகயுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →