Tamil Cinema News | சினிமா செய்திகள்
போலீசுக்கு சூர்யா திடீர் ஆதரவு…! காரணம் என்ன?
சிங்கம் 3 படம் வரும் பிப்ரவரி 9 ம் தேதி ரிலீஸ் ஆக போகிறது. நான்கு முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த முறை எப்படியாவது ரிலீஸ் ஆகி 200 கோடி வரை வசூல் செய்யவேண்டும் என்று முடிவில் இருக்கிறார்கள் படக்குழு.
சிங்கம்3 பிரஸ் மீட்டில் பேசிய சூர்யா,’ ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்ட நேரத்தில், இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதே?’ என்று மீடியா கேட்ட கேள்விக்கு சூர்யா பதில் சொல்லியுள்ளார்.
“ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. விசாரணையும் இதற்காக நடந்து வருகிறது. சில போலீசார் தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையே குற்றம் சொல்லக்கூடாது. எங்க படத்தில் திருச்சி போலீஸ் மயில்வாகனன் போல ஒரு போலீசை காட்டியுள்ளோம்” என்று சொல்லி மழுப்பி இருக்கிறார் சூர்யா.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
