fbpx
Connect with us

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வர அது பட்டாசோ பொங்கலோ கிடையாது என்று இயக்குனர் பாலா சொன்னதை நினைவு கூர்ந்த சூர்யா !.

News | செய்திகள்

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வர அது பட்டாசோ பொங்கலோ கிடையாது என்று இயக்குனர் பாலா சொன்னதை நினைவு கூர்ந்த சூர்யா !.

இந்த வருட ஆரம்பத்திலேயே சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்த செய்தி விஜய் , அஜித் மற்றும் சூர்யா படங்கள் தீபவளிக்கு ரிலீஸ் ஆகப்போகிறது என்பது. முதலில் விசுவாசம் அடுத்தாக NGK என தற்பொழுது விலகிவிட்டனர் இந்த ரேஸில் இருந்து.

நந்த கோபாலன் குமரன்

‘என்.ஜி.கே.’ செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம், இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கின்றனர். முதலில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்ற அறிவிப்பு வந்தது.

பின்னர் இயக்குனர் செல்வாவும் ‘அன்பு நண்பர்களே… தாமதத்துக்கு வருந்துகிறோம். நாங்கள் அனைவரும் மிகக் கடுமையாகத்தான் உழைத்தோம். ஆனால், சில விஷயங்கள் எங்கள் கைமீறி நடந்துவிட்டன’ என்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். சூர்யா ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சூர்யா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது என்.ஜி.கே தாமதம் குறித்து குரல்கள் எழ விளக்கம் அளித்துள்ளார் நம் ஹீரோ…

‘‘இதே ஸ்டேஜில் தான் சொன்னேன். என்.ஜி.கே தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று . ஆனா, இப்போ ரிலீஸ் ஆகல. எனக்கு இந்தத் தருணத்தில் பாலா அண்ணன் சொன்னதுதான் ஞாபகம் வருது. “தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வர அது பட்டாஸோ பொங்கலோ கிடையாது அது படம்!” சில விஷயங்கள் நம்மள மீறி நடக்குது.எல்லாமே ஒரு நம்பிக்கையில் போய்கிட்டு இருக்கு. இந்தப் படத்தை எப்படி ஆரம்பிச்சோமோ, அதே பாசிட்டிவிட்டியோட முடிப்போம். ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க. சொன்ன மாதிரி தீபாவளிக்கு வெளியிட முடியலன்னு வருத்தமா இருக்கு. உங்க அன்பு எப்பவும் எங்க கூட இருக்கும்னு நம்புறேன்’’ என்று மனமுருகி பேசியுள்ளார் சூர்யா ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top