Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைப் போற்று படம் உருவாகியுள்ள நாவலின் உண்மை கதாநாயகனை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள பிரமாண்ட படம் தான் ‘சூரரைப்போற்று’. இந்த படம் திரையரங்கில் திரையிடாமல் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இதன் இரண்டாவது ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது திடீரென்று சூரரைப்போற்று படமானது ‘Simple Fly’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு கதைதான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் கேப்டன் G.R. கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே படமாக்கி உள்ளதாக தெரிகிறது.
ஏனென்றால் கேப்டன் G.R. கோபிநாத்தின் புகைப்படமும் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் புகைப்படமும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரே மாதிரியாகத் தெரிகிறது.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளியான இந்த செய்தியால் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

suriya-1
