thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்’. “நானும் ரௌடி தான்” படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்தின்மீது நிறைய எதிர்பார்ப்புகள்.

அனிருத் இசையில் ஏற்கெனவே இந்தப் படத்தின் முதல் பாடலான ‘நானா தானா’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் இரண்டாவது பாடலின் டீஸரை வெளியிட்டுள்ளனர். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியிருக்கிறார், மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளனர்.

இந்த ஒரு நிமிட டீஸரில் அனிருத், சமீபத்தில் வைரலான ஜிமிக்கி கம்மல் பெண்கள், தம்பி ராமையா, சூர்யா, விக்னேஷ் சிவன் உட்பட பலர் வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  பாகுபலி நடிகையின் பலம் தெரியாமல் மோதும் சூர்யா,விஷால்..!!!

சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக், நந்தா, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது.

surya

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடல் முழுவதும் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ரொம்ப நாளாக நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கம் வந்தாலே படத்தின் அப்டேட் கேட்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.இந்நிலையில் சொடக்கு பாடல் வெளியாகியுள்ளது. சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது என்ற பாடல் அனிருத் இசையில் சும்மா தெறிக்குது.

முன்னதாக வெளியான சொடக்கு பாடல் டீஸரில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் வந்து சொடக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சொடக்கு பாடலை கேட்டு சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  சூர்யா மீண்டும் இந்த இயக்குனருடன் இணைகிறாரா.! குஷியில் சூர்யா ரசிகர்கள்.!

விரட்டி விரட்டி வெளுக்கத் தோனுது அதிகாரத் திமிரை, பணக்கார பவரை தூக்கிப் போட்டு மிதிக்கத் தோணுது என்று பாடல் வரி உள்ளது. இதை கேட்டுவிட்டு பாஜக எதிர்ப்பு தெரிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.