வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வீட்டுலையும் கஷ்ட படுத்துறங்க.. அட பாவமே.. விஜய் சேதுபதி மகனுக்கு இவ்வளவு பிரச்சனையா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. அதே நாளில் விஜய் சேதுபதி மகன் நடிப்பில் உருவான பீனிக்ஸ் படமும் வெளியாகிறது.

இந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணிகளை கவனித்து வருகிறார் விஜய் சேதுபதி மகன் மற்றும் நடிகர் சூர்யா. அந்த ப்ரோமோஷன் ஆரம்பித்த நாள் முதல் இவருக்கு நேரம் சரி இல்லை என்றே சொல்லலாம். இவர் எதார்த்தமாக ஒன்று சொல்ல, அது பேசும்பொருளாக மாறி விடுகிறது.

வீட்டுலையும் அடிக்கிறாங்களே..

அப்பா வேற நான் வேற என்று இவர் சொன்ன நாள் முதல் பஞ்சாயத்து தான். சூர்யா மட்டும் தான் என்றும் சூர்யா சேதுபதி என அப்பாவின் பெயரைக் கூட பயன்படுத்த மாட்டேன் என்று சொன்னார். இது ஆணவம் என்று ஒரு சிலர் விமர்சித்தனர்.

விஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் அவருடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் சூர்யா சேதுபதி. தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பீனிக்ஸ் படம் வரும் நவம்பர் 14 அன்று வெளியாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசியது, சிரிப்பையும், அதே நேரத்தில் அட பாவமே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியதாவது, “அப்பா வேற.. நான் வேறன்னு சொன்னதை வைத்து சோஷியல் மீடியாவில் தான் ட்ரோல் பண்றாங்கன்னு பார்த்தால். எங்க வீட்டுல அதுக்கு மேல என்ன வச்சு செஞ்சிட்டாங்க.. “

“அப்பா வேற.. நான் வேறன்னு எதுக்கு எடுத்தாலும், என்ன கேட்டாலும் சொல்லி கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அந்த விஷயத்தையும் என் குடும்பத்தினர் ஜாலியாக எடுத்துக் கொண்டது உண்மையில் மனநிம்மதி அளிக்கிறது. ஏன் என்றால் ஆரம்பத்தில் இதை ட்ரோல் செய்ததை பார்த்து மிகவும் உடைந்து போனேன்.. வீடு தான் எப்போவுமே ஆறுதல்..” என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள்..” விடு பா எதோ சின்ன பையன்.. இத போயி பெருசாக்கிகிட்டு” என்றும் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

- Advertisement -

Trending News