fbpx
Connect with us

இணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.! அதிர்ச்சியில் படக்குழு

News | செய்திகள்

இணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.! அதிர்ச்சியில் படக்குழு

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார், NGK படத்தில் சூர்யாவுடன் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி அவர்கள் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ngk-suriya

ngk-suriya

அதேபோல் இயக்குனர் செல்வராகவனை படம் எப்போது வரும் என கேள்வி கேட்டு நச்சரித்து வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள், இதனால் செல்வராகவன் படம் வரும்போது வரும் என ரசிகர்களிடம் எரிந்து விழுந்தார் , சிறிது காலம் கிடப்பில் கிடந்த NGK படப்பிடிப்பு தற்பொழுது கேரளாவில் தொடங்கியுள்ளது, அங்கு ராகுல் ப்ரீத் சிங் சூர்யா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அங்கு நடக்கும் படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள் அந்த ரசிகர்களில் ஒருவர் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைதளங்களை பதிவிட்டுள்ளார் அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது, இதனை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதனால் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு டுவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அவர் கூறியதாவது ரசிகர்கள் அனைவரும் சூர்யாவின் NGK படம் பற்றி தகவல் அறிய ஆவலாக இருக்கிறீர்கள் புரிகிறது, படத்தை ரிலீஸ் செய்ய தயார் செய்து வருகிறோம், படம்வெளியாகும்வரை உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்துங்கள் படத்தின் காட்சிகளை கசிய விடாதீர்கள் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top