24-suryaஇன்று வெளியாகியிருக்கும் ’24’ திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆத்ரேயா என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக சூர்யா மிரட்டியிருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.

கிரிக்கெட் கிரவுண்டில் டோணியுடன், சூர்யா செல்ஃபி கிளிக்குவது போல கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு காட்சியை படக்குழு அமைத்துள்ளது. இப்படத்தில் டைம் மெஷின் தவிர ‘ப்ரீஸ் டைம்’ (உறைந்து போதல்) என்ற கான்செப்டை வைத்தும், விக்ரம் குமார் காட்சிகள் அமைத்திருக்கிறார்.

அதில் ஒரு காட்சிதான் டோணியுடன் சூர்யா செல்பி எடுப்பது. டோணி உண்மையில் நடிக்கவில்லை என்றாலும், இந்தக் கிராபிக்ஸ் காட்சி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.