fbpx
Connect with us

சூர்யா ‘S3’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்

News | செய்திகள்

சூர்யா ‘S3’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்

s3-movie-suryaசூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘S3’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படப்பிடிப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடியில் தயாராக இருந்த நிலையில் திடீரென அனுஷ்கா உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்தது. அனுஷ்கா இல்லாமல் இந்த படப்பிடிப்பை நடத்த முடியாது என்பதால் இயக்குனர் ஹரி படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதாகவும், இன்று படக்குழுவினர் தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மலேசியா படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி முடித்துவிட்டு அதன்பின்னர் தூத்துக்குடி படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top