Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடிமேல் அடி வாங்கிய சூர்யா.. மீண்டும் திருப்பி அடிக்க ஒரு வாய்ப்பு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் சூர்யா. இவரை மாஸ் நடிகர் என்றும் சொல்லலாம் இவர் மாஸ், கிளாஸ் என்ற இரண்டு குதிரையிலும் வெற்றியாக சவாரி செய்தவர்.
இப்படி இருந்த சூர்யா சமீபகாலமாக அவருக்கு சோதனை பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆம் சூர்யாவுக்கு அஞ்சான் படம் அவர் நினைத்த வெற்றியை தரவில்லை அதை தொடர்ந்து அவர் நடித்த மாஸ், 24, சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் வரை எந்த படமும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் 24, தானா சேர்ந்த கூட்டம் படம் மட்டும் தெலுங்கில் வெற்றியை அடைந்தது, இப்படி சூர்யாவுக்கு தொடர்ந்து தமிழகத்தில் மார்கெட் குறைந்து கொண்டே வருகிறது.
சூர்யா இந்த வருடம் அடுத்தடுத்து தரமான இயக்குனர்களை கையில் எடுத்துள்ளார் என்றே கூறலாம். இவர் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று சுதா கொங்கரா இயக்கத்தில் ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்து கோலிவுட்டை மிரட்டியது என்றே சொல்லலாம். இந்த படம் சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சூர்யா – ஹரி கூட்டணியில் அடுத்த படத்தை எடுக்க இருப்பதாகவும், இசை அமைப்பாளராக D.இமான், சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாராம். சூர்யா சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைவதற்கு ஆசைப்படுவதாகவும், அவர் சம்மதித்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தை கையில் எடுக்க உள்ளாராம். இந்தப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ஒரு நாவலை தழுவிய கதைக்களமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து வெற்றி இயக்குனர்களை வைத்து களமிறங்கும் சூர்யா வெற்றிப்படங்களை தருவார் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
