Tamil Cinema News | சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துடன் மல்லுக்கட்டும் சூர்யா தயாரிப்பாளர்..
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்புக் குழு அனுமதி அளிக்காமல் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிகபட்ச கட்டணத்தை குறைக்க தயாரிப்பாளர் சங்க கடந்த மார்ச் மாதம் போராட்டத்தை தொடங்கியது. முதலில் புது படங்களில் ரிலீஸ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது. மார்ச் 16க்கு பிறகு எந்த வித திரைப்பட நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இதனால், தியேட்டர்களின் வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருதரப்புக்கு இடையே சுமூகமான உறவு ஏற்பட்டது. இ-சினிமா தியேட்டர்களில் புரொஜெக்டர் சேவை கட்டணம் 50 சதவீதமாக குறைத்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ரூ.21 ஆயிரம் கட்டணமாக இருந்தது, அது தற்போது ரூ.10 ஆயிரமாக குறைந்துள்ளது. வார கட்டணம் ரூ.50 ஆயிரம் என்றும், ஒரு காட்சிக்கு ரூ.250 என்றும் டிஜிட்டல் சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படங்கள் திரையிடும் தேதி முறைப்படுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் திரைக்கு வரும் படங்களின் தேதி முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டு தனி அட்டவணை பிறப்பிக்கப்படும். இதற்காக திரைப்பட வெளியீட்டு ஒழுங்குப்படுத்தும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்போராட்டத்தின் முடிவாக முதல் வாரத்தில் மெர்குரி படத்துடன், சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகியது. அதே போல, இந்த வாரம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா, பக்கா, பாடம் படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பண்டிகை தினங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்களில் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
சூர்யா கார்த்தியை வைத்து முக்கால்வாசி படத்தை எடுக்கும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை மே 4ந் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் டுவிட்டர் கணக்கில் மே 4 ந் தேதி எந்த படத்தையும் வெளியிட முறையாக அனுமதி வழங்கப்படவில்லை. அது ஐஏஎம்கே படத்தையும் சேர்த்து தான் என டுவீட் தட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு, இருதரப்பு எந்த முடிவும் இதுவரை சொல்லாத நிலையில் படத்தை தடைகளை மீறி வெளியிடுவாரா இல்லை தள்ளிப்போடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, ஞானவேல்ராஜா தயாரிப்பில் நோட்டா படத்தின் தொடக்க விழாவை தயாரிப்பாளர் சங்க போராட்டத்தின் ஆரம்பத்தில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், விஷால், சமந்தா நடித்திருக்கும் ‘இரும்புத்திரை’ படம். திரைப்பட வெளியீட்டு ஒழுங்குப்படுத்தும் சிறப்பு குழு ஒப்புதலைப் பெற்று வரும் மே 11 என வெளியிட இருப்பதாக விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
