fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யுடன் மோதவில்லை – 24 படம் ரிலீஸ் குறித்து சூர்யா அறிவுப்பு

News | செய்திகள்

விஜய்யுடன் மோதவில்லை – 24 படம் ரிலீஸ் குறித்து சூர்யா அறிவுப்பு

vijay-suryaஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் சூர்யா நடித்த ’24’ திரைப்படமும் வெளிவரும் என பரபரப்புடன் செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்தது.

இந்நிலையில் இந்த செய்திக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் தேதி ‘தெறி’ அல்லது ’24’ ஆகியவற்றில் ஒரு திரைப்படம்தான் வெளிவரும் என்றும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், தன்னுடைய ’24’ திரைப்படம் தமிழ்ப்புத்தாண்டில் வெளிவரும் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

எனவே விஜய்-சூர்யா படங்கள் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி நேருக்கு நேர் மோதும் என்ற வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top