Connect with us
Cinemapettai

Cinemapettai

NGK

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா நடிக்கும் NGK படத்தின் டீசர் எப்பொழுது.? தயாரிப்பாளர் கூறிய மாஸ் தகவல்.!

நடிகர் சூர்யா ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து NGK படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துவருகிறார்.கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது ஷூட்டிங். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடிக்க, யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

மார்ச் 5-ஆம் தேதி செல்வராகவன் பிறந்தநாள் அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழு. தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

தற்பொழுது இந்த படத்தை பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் எஸ்.ஆர்.பிரபு ஆம் இந்த படத்தின் டீசர் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top