சூர்யா சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாம். இதற்காக தங்கை கதாபாத்திரத்திற்கு முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே அஜித் நடித்த வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூர்யாவும் தனக்கு தங்கையாக நடிக்க புதுமுகம் வேண்டாம் ஹீரோயின் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்துள்ளாராம், சூர்யாவிற்கு தங்கையாக நடிக்க யார் தான் சம்மதிப்பார்கள்? பார்ப்போம்.