Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா தயாரிக்கும் அடுத்த படம் இந்த சர்ச்சையான படத்தின் இரண்டாம் பாகம்.! மாஸ் தகவல்
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் கேவி ஆனந்த் இயக்கத்தில், ஒரு படத்திலும் நடித்து வருகிறார், செல்வராகவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

surya
நடிகர் சூர்யா நடிப்பது மட்டுமின்றி சமீபத்தில் தயாரிப்பதிலும் இறங்கியுள்ளார் இவர் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தயாரித்த முதல் படத்தில் இவரின் தம்பி கார்த்திக் தான் நடித்திருந்தார் இந்த நிலையில் நடிகர் சூர்யா அடுத்த படத்தை தயாரிக்க ரெடியாகி விட்டார் அந்தவகையில் கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து தற்போது உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறார், உறியடி திரைப்படம் மக்களிடம் பிரபலம் ஆவதற்கு முன்பே திரையரங்கிலிருந்து தூக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தில் சாதி பற்றி அதிகமாக காட்சி இருந்ததால் சர்ச்சை ஆனது.
