Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைப்போற்று வெற்றியால் சூர்யாவிற்கு எகிறும் சம்பளம்.. பிரமித்து போன திரையுலகம்
தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் கால் பதித்தாலும், தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி, தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இவருக்கு இன்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
மேலும் 2020ஆம் ஆண்டு OTT வழியாக வெளிவந்த எந்த ஒரு படமும் பெருமளவில் வெற்றி பெறாத நிலையில், சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மெகா ஹிட்டானது.
அதே போல், ஆறு வருடங்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அவர்களை ஏமாற்றி வந்த சூர்யா, ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலம் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டார். மேலும் சூரரைப்போற்று திரைப்படம் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் வாங்க உள்ள சம்பளம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி, திரையுலகினரை வாயடைத்துப் போகச் செய்துள்ளது.
அதாவது சூர்யா ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்குப் பிறகு பெரும் புகழை பெற்று உள்ளார். இந்த படத்தை பற்றி தான் தற்போது வரை தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி எங்கும் பேச்சு.
இதனைத் தொடர்ந்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

surya
தற்போது இந்த படத்திற்காக சூர்யாவிற்கு ரூபாய் 35 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இதற்கு ‘சூரரைப்போற்று’ படத்தின் மூலம் சூர்யாவுக்கு கிடைத்த வெற்றிதான் முழுக்க முழுக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.
எனவே, சூர்யாவின் இந்த அபரிமிதமான வெற்றியை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு, திரையுலகினர் பலரை வியக்க வைத்துள்ளது.
