fbpx
Connect with us

மோகன்லால், மம்முட்டி சாதனையை நெருங்கிய சூர்யா!

mamooty-surya-mohanlal

News | செய்திகள்

மோகன்லால், மம்முட்டி சாதனையை நெருங்கிய சூர்யா!

இதுவரை இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் தான். தொடர்பாகங்களாக எடுக்கப்பட்டாலும் கூட அவை அனைத்திலும் ஒரே நடிகர் தொடர்ந்து நடிப்பது என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.

அந்தவகையில் இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் நடித்திருந்த மம்முட்டி, இந்தப்படத்தின் இரண்டாவது பாகமான ஜகார்த்தா, 3வது பாகமான சேதுராம ஐயர் சி.பி.ஐ, நான்காவது பாகமான நேரறியான் சி.பி.ஐ என நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் ஒரேவிதமான தோற்றத்தில் நடித்திருந்தார்.

மம்முட்டி 2005லேயே செய்துவிட்ட இந்த சாதனையை மோகன்லால் இதோ வரும் ஆண்டில் சமன் செய்யப்போகிறார்.. ஆம்.. ராணுவ பின்னணி சார்ந்த படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டான மேஜர் ரவி இயக்கிய கீர்த்தி சக்ரா, குருசேத்ரா, காந்தகார் என மூன்று படங்களிலுமே மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இப்போது இவர்கள் கூட்டணியில் நான்காவது பாகமாக உருவாகி வரும் 1971 என்கிற ராணுவகளம் சார்ந்த படத்திலும் நான்காவது முறையாக மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்..

இந்திய மொழிகளில் இவர்கள் இருவரும் செய்த சாதனையை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் வந்துகொண்டிருப்பவர் சூர்யா.. அதிரடி போலீஸ் அதிகாரி துரை சிங்கமாக சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்தவர் அவற்றின் வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாவது பாகமான எஸ்3 என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். வரும் டிச-16ல் இந்தப்படம் ரிலீசாகப்போகிறது.. இதற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்துதான் இதன் நான்காவது பாகம் உருவாகுமா என்பதும் மோகன்லா, மம்முட்டி இருவரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைக்குமா என்பதும் தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top