சூர்யாவின் அடுத்த படத்தை யார் எடுப்பார் என்பதும் ? நயன்தார யாரை வைத்து அடுத்த படம் எடுக்கிறார் என்பதும் பெரிய விவாதமாக இருந்தது .. அப்படி என்ன ? விஷயம். எல்லாம் விக்னேஷ் சிவன்காகதான் ..

‘S3’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதலன் இயக்குகிறார். நம்ம அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இவர்களோடு கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க உள்ளனர். ரொம்ப நாள் யோசிச்சி இந்த படத்துக்கு “தானா சேர்ந்த கூட்டம்” என பெயர் வைத்தனர் . மேலும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரும் எனவும் கூறப்படுகிறது.