விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

surya

பின்பு அடுத்து அடுத்து வெளிவந்த படத்தின் செகண்ட் லுக் மற்றும் பாடல் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது படம்   ஜனவரி 12 ம் தேதி பொங்கலுக்காக வெளியாகவுள்ளது. வெளிவரும் நேரத்தில் படத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் பிரசாத் அம்மா சாந்தி .

thaana serntha koottam
thaana serntha koottam

இந்த படத்தை பற்றி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் கருத்து தெரிவித்திருந்தார் இந்த படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என கூறினார்.இதை படக்குழு முன்பே அறிவித்துவிட்டது.

thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

இந்த நிலையில் ஸ்பெஷல் 26 படத்தை தென்னிந்திய மொழியில் வெளியிட தான் உரிமை வாங்கியுள்ளதாகவும் அதனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தடைசெய்ய வேண்டும் என நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி வழக்கு தொடர்ந்தார்.

thaana-serntha-koottam
thaana-serntha-koottam

அதனால் மேலும் தயாரிப்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதில் படக்குழுக்கு சிக்கல் ஏற்பட்டது.

surya

இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல நிறுவனமான ஆர்.பி.பி நிறுவனத்திடம் இருந்து தானா சேர்ந்த கூட்டத்தின் தயாரிப்பாளர் வாங்கியதாக விளக்கம் அளித்தார்.

surya

இதனை ஆதாரத்துடன் படக்குழு நிறுபித்தது அதனால் இதை ஏற்ற நீதிபதி தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளார் .படக்குழு இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

surya

இதை கேட்டதும் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.