தியேட்டர்களுக்கு எமனாக வந்த சூர்யா.. எதற்கும் துணிந்தவனுக்கு வந்த சிக்கல்

நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். 2013 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனம் சூர்யாவின் மனைவி ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தை முதலில் தயாரித்திருந்தார்.

அதன் பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான மகளிர் மட்டும், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு ஆகிய படங்களை தயாரித்து இருந்தது. அதேபோல் சூர்யாவின் தம்பி கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தையும் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது கார்த்தி நடித்து வரும் விருமன் படத்தையும் சூர்யா தயாரித்து வருகிறது. சூர்யா நடிப்பில் உருவான பசங்க 2, 24, சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை இந்நிறுவனம் தயாரித்து இருந்தது. இதுதவிர உரியடி 2 படத்தையும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

சூர்யாவின் 2டி நிறுவனம் அமேசான் ஓடிடி நிறுவனத்திற்காக நான்கு திரைப்படங்கள் தயாரித்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து இருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படிராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஜோதிகாவின் உடன்பிறப்பு மற்றும் சூர்யாவின் ஜெய் பீம் ஆகிய படங்கள் அமேசான் ஓடிடியில் வெளியானது.

தற்போது நான்காவது படமாக அருண் விஜய், அவரது மகன் அர்னவ் நடிப்பில் உருவான ஓ மை டாக் படத்தை ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனால் சூர்யா ஓடிடிக்கு ஆதரவளித்து, தியேட்டர் அழிவுக்குக் காரணமாக இருக்கிறார் என்ன பல தியேட்டர் உரிமையாளர்கள் சூர்யாவின் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளார்கள்.

சூர்யா வரிசையாக அதிக படங்களை ஒடிடிக்கு கொடுப்பதால் தியேட்டர்களுக்கு கிடைக்கும் வருவாயை தடை செய்கிறார் என்றும் சூர்யா நடிப்பில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என பல தியேட்டர் உரிமையாளர்கள் உச்சக்கட்ட கோபத்தில் கூறி வருகிறார்கள்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தியேட்டர் உரிமையாளர்கள் நினைத்தால் இப்படத்தை தோல்வி படமாக ஆக்க முடியும் என்று சூர்யா யோசித்து இனி அவர் தயாரிக்கும் படங்களை தியேட்டரில் வெளியிடுவாரா என்று பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்