வாய்விட்டு மாட்டிக்கொண்ட சந்தானம்.. ஜெய்பீம் பட சர்ச்சையால் இணையத்தில் கொந்தளித்த ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் திரைத்துறையினர், அரசியல் வட்டாரங்கள், மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது. முதலில் பாமகவினர் வன்னியர் ஜாதியை குறிப்பிடுவது போல் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மறைந்த குருமூர்த்தியை குறிப்பது போல் வில்லன் பெயர் குருமூர்த்தி என்றுள்ளது. போலீஸ் அதிகாரி குருமூர்த்தியின் வீட்டில் அக்னி கலசம் இருப்பது வன்னியர் சமூகத்தை குறிக்கிறது என பாமகவினர் ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சூர்யா 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது.

தற்போது சந்தானம் சபாபதி படத்தின் பிரஸ்மீட்டில் போது ஜெய்பீம் படத்தை விமர்சித்து உள்ளார். ஒருவரை தாழ்த்தியும், மற்றொருவரை உயர்த்தியும் படம் எடுக்க கூடாது என சந்தானம் விமர்சித்துள்ளார். இந்துக்களை உயர்த்திப் பேசலாம் அதற்காக கிறிஸ்துவர்களை தாழ்த்திப் பேசக் கூடாது. எல்லா ஜாதி, மதத்தினரும் படம் பார்க்க வருவார்கள் என்பதை உணர்ந்து இளைய சமுதாயத்திற்கு நல்ல சினிமாவை தரவேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் தற்போது சந்தானத்தின் பேச்சு இணையத்தில் விவாதப் பொருளாக இருக்கிறது. மேலும் ஒரு சிலர் சந்தானம் சொன்னது தவறு இல்லை அவர் சொல்வது சரிதான் ஆனால் அவர் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதனை வேறு விதமாக அனைவரும் எடுத்துக் கொள்வதாக கூறி வருகின்றனர். மேலும் எந்த கருத்தாக இருந்தாலும் சினிமாவில் சொல்லும்போது அதனை கவனத்துடன் சொல்ல வேண்டும் என்பதை அனைத்து இயக்குனர்களுக்கும் இந்த படம் ஒரு உதாரணமாக உள்ளது.

எல்லா சமுதாயத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக ஒரு சமுதாயத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக காட்டுவதும் மற்றொரு சமுதாயத்தில் இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் காட்டுவதும் ஒரு சரியான முறையை கிடையாது. எந்த ஜாதியை எடுத்தாலும் எந்த மதத்தை எடுத்தாலும் நல்லவர்கள் இரு தரப்பிலும் தான் இருக்கிறார்கள்.

அதனால் ஒரு சமுதாயத்தை உயர்த்துவதும் மற்றொரு சமுதாயத்தை தாழ்த்துவதும் தவறான விஷயம் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். மேலும் சந்தானத்திற்கு தற்போது ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தாலும் டுவிட்டரில் #weStandwithSurya எனும் ஹஸ்டக் ட்ரெண்டாகி வருகிறது.

உண்மையான சம்பவத்தை வெளிக்கொண்டு வருவது என்றால் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இந்த நிலையில் இது ஒரு ஜாதிப் பிரச்சனையாக ஆகி விடக்கூடாது என்பதற்காக சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். சந்தானம் மற்றும் சூர்யா ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டாலும் அதிக அளவில் சூர்யாவுக்கு தான் ஆதரவு திரண்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்